Header

Sri Lanka Army

Defender of the Nation

04th November 2022 16:31:17 Hours

பதவி உயர்வு பெற்ற இயந்திரவியல் காலாட்படையணி சிரேஷ்ட அதிகாரிக்கு படையணி தலைமையகத்தில் மரியாதை

இரண்டு நட்சத்திர ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரியான 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜானக பிரியதர்ஷன அவர்களுக்கான பாராட்டு விழா தம்புலுஹல்மிலவெவ இயந்திரவியல் காலாட்படையணி தலைமையகத்தில் 2022 ஒக்டோபர் 28 இடம் பெற்றது.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இயந்திரவியல் காலாட்படையணி நிலைய தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க அவர்கள், படையணி உறுப்பினர்களுடன் இணைந்து காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதையினை தொடர்ந்து படையினருடன் இணைந்து அவர் மதிய விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.