Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2022 19:02:54 Hours

மின்சார இயந்திர பொறியியல் பணிப்பகம் இலங்கையில் ‘திறனாளர்’ பாடநெறி ஆரம்பம்

பொதுநலவாய நாடுகளில் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வர்த்தகங்களில் நிபுணத்துவம் வாய்ந்த இராணுவ வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தகுதியான திறனாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தின் மின்சார இயந்திர பொறியியல் படையினருக்கு அந்நிய செலாவணியைச் சேமிக்கும் முகமாக இலங்கையில் உள்ளூர் மட்டத்தில் குறித்த பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில், மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்கள் இலங்கையில் முதன்முறையாக இத்திட்டத்தை தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி பாடசாலையில் ஆரம்பித்து வைத்தார்.

செவ்வாய்க்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட ஆறுமாத கால பாடநெறியானது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைச் சேர்ந்த 20 சிரேஷ்ட அதிகாரவணையற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்துடன் இப்பாடநெறி 01 மே 2023 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தென் கொரியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு இந்தப் பயிற்சி நெறி பயனாக அமையும்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி கொடவத்தை இலங்கை-கொரியா தேசிய தொழிற் பயிற்சி நிறுவனத்தில் –இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகியோர் திட்டத்திற்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கினர்.