Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd November 2022 19:06:47 Hours

621 வது பிரிகேட் படையினரால் சம்பத்நுவர பிள்ளைகளின் கற்றல் தேவைகள் பூர்தி

சம்பத்நுவர பிரதேசத்தில் வசிக்கும் தரம் 5 கல்வி கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு 621 வது பிரிகேட் படையினரால், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெருமளவான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை புதன்கிழமை (26) விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

62 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 621 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் வினாத்தாள்களுக்கான அனுசரனை வழங்கப்பட்டது.

அதற்கமைவாக, சம்பத்நுவர தேசிய பாடசாலையில் குறித்த பிரதேசத்தின் 21 பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் கற்கும் 650 பரீட்சார்த்திகளுக்கு மேற்படி மாதிரித் தாள்கள் விநியோகிக்கப்பட்டன.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சியின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த விநியோக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 621 வது பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி இந்த திட்டத்திற்கு தனது அதிகபட்ச ஆதரவை வழங்கியிருந்தார்.