Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2022 21:29:40 Hours

பாதுகாப்பு சேவை விளையாட்டு கயிறு இழுத்தல் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவம் வென்றி

12 வது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டிகளில் கயிறு இழுத்தல் சம்பியன்ஷிப் போட்டியானது இலங்கை விமானப் படைத் தலைமையகம் கட்டுநாயக்காவில் ஒக்டோபர் 26 முதல் 28 வரை இடம்பெற்றது.

இப்போட்டிகளில் 640 கிலோ எடைப் பிரிவில் இராணுவ ஆண் போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு 2 - 0 என்ற கணக்கில் சம்பியன்ஷிப்பை தனதாக்கி கொண்டனர்.

இதேபோல், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் மகளிர் அணிகள் பங்கேற்ற சம்பியன்ஷிப் போட்டியில் 560 கிலோ எடைப் பிரிவில் இராணுவ மகளிர் வீராங்கனைகள் கடற்படையினரை தோற்கடித்து 2 - 0 என்ற கணக்கில் சம்பியன்சிப்பை வென்றனர்.