Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2022 21:05:09 Hours

55 வது படைப்பிரிவினரால் விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு உதவி

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் தலைமையகம் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனைக் கொண்ட விதவை பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் தையல் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியதுடன், யாழ்ப்பாணம் கெவில் பகுதியில் வாழ்வதற்கு தனி இடத்தையும் வழங்கியது.

55 வது படைப்பிரிவின் வேண்டுகோளிட்கு இணங்க கொழும்பைச் சேர்ந்த திருமதி பி சுபத்ரா அவர்களால் தையல் இயந்திரத்திற்கு அனுசரணை வழங்கப்பட்டது.

துணிச்சலான விதவையான திருமதி மதுரன் நதியா தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் பல இண்ணல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதைக் அவதானித்த படையினர் படைப்பிரிவு தளபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

சனிக்கிழமை (29), 55 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்கள் 175,000/= பெறுமதியான தையல் இயந்திரத்தை அன்பளிப்பு செய்ததுடன், அவர்களின் பொருளாதாரச் சுமைக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக அவர் தைக்கும் ஆடைகளை விற்பனை செய்வதற்கான தனியான இடத்தையும் திறந்து வைத்தார்.

பயனாளியான திருமதி மதுரன் நதியா சமீபத்திய விபத்தில் தனது கணவரை இழந்து வாழ்வாதாரம் இன்றி இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகனுடன் வாழ்கின்றார்.