Header

Sri Lanka Army

Defender of the Nation

31st October 2022 21:15:34 Hours

போர் கருவி பணிப்பாளர் நாயகம் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 8 வது இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் தேவைகளை மதிப்பாய்வு

இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் வழங்கல் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஹிரோஷா வணிகசேகர அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 8 வது இலேசாயுத காலாட் படையணி போன்றவற்றிக்கு அந்த தலைமையகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் உபகரண,வழங்கல் தொடர்பான விடயங்களை மதிப்பீடு செய்வதற்கான விஜயத்தினை வியாழக்கிழமை (27) மேற்கொண்டார்.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இவ் விஜயத்தினை பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் டி.ஏ அமரசேகர, மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

முதலாவதாக மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகமான பனாகொட இராணுவ முகாமிக்கு விஜயம் செய்துடன் அங்கு அவரை மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி மற்றும் பிரிகேடியர் பொது பணி என்போர் வரவேற்றனர்.

பின்னர், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, போர் கருவி பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் 2022/2023 ஆம் ஆண்டிற்கான நிர்வாகம் மற்றும் வழங்கல் தொடர்பான முக்கிய காரணிகள் விவாதிக்கப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் 14 மற்றும் 61 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன்பின், தெல்கொடவில் உள்ள 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு போர் கருவி பணிப்பாளர் நாயகம் அவர்களின் தேவைகளைக் கண்டறியவும், வரவிருக்கும் 2022/2023க்கான தேவைகளை மதிப்பீடு செய்யவும் விஜயம் செய்தார்.

அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அறிந்து கொள்வதற்காக, கலந்துரையாடலில் அமர்வதற்கு முன், பணிப்பாளர் நாயகத்தின் வாகன தொடரணிக்கு இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.