Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2022 20:58:29 Hours

யாழ்.படையினரால் “தீபாவளி”தினத்தினை முன்னிட்டு 69 இந்து கோவில்களில் சிரமதான பணி

திங்கட்கிழமை இந்துக்களின் தீபத் திருநாளான 'தீபாவளி'க்கு இணையாக, 51 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின்படி, யாழ்.பாதுகாப்புப் படை தலைமையக 51 வது படைப்பிரிவு படையினர், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக, யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள 69 கோவில்களில் நூற்றுக்கணக்கான பல விளக்குகளால் அலங்கரிக்க குருக்கள்மாருக்கு உதவியாக 'சிரமதானம்' நடத்தினர்.

யாழ். தளபதியின் ஆசியுடன் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் போது படையினர், கோவில் வளாகங்களில் உள்ள குப்பைகளை அகற்றி, கோவில் வளாகத்தை துப்புரவு செய்து, நிலம் மற்றும் பாதைகளை மணலால் சீரமைத்து, அந்த 69 கோவில்களுக்கு பக்தர்கள் வருவதற்கு முன் நேர்த்தியாக தூய்மை செய்தனர்.

மேலும், 2022 அக்டோபர் 23 மற்றும் 24 தீபாவளி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு போலீஸ் அதிகாரிகளுடன் படையினர் பாதுகாப்பு அளித்தனர். வெள்ளை உடை அணிந்த அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினரும் அந்தந்த கோவில்களில் 'பூஜை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அன்றைய தினத்திற்கு பண்டிகைக் களிப்பைச் சேர்க்கும் வகையில், பொலிஸாருடன் சிப்பாய்கள் அந்த இடங்களில் வாகன நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துளள் 511, 512, 513 வது மற்றும் 515 வது பிரிகேட் படையினர் தங்கள் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகளை நடத்துவதற்கு தமது பங்களிப்பினை வழங்கினர். தலைமை குருக்கள் மற்றும் கோவில் அறங்காவலர்கள் இராணுவத்தின் ஒத்துழைப்பைப் பாராட்டியதுடன், மத சடங்குகள் மற்றும் சடங்குகளின் போது அனைத்து தரப்புகளுக்கும் ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர்.