Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2022 11:32:42 Hours

மாத்தளை மாணவ தலைவர்களுக்கு இராணுவத்தினரால் தலைமைத்துவ வழிக்காட்டல் பயிற்சி

இராணுவத் தலைமையக ஊடக பணிப்பக பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளரும் இலங்கை இராணுவத்தின் முன்னோக்கு திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ சமிஞ்சை படையணியினால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 'தலைமைத்துவ ' பயிற்சி திட்டம் மாத்தளையில் உள்ள 5 பாடசாலைகளை உள்ளடக்கிய பாடசாலை மாணவ தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனித தோமையர் கல்லூரி, விஜய கல்லூரி, அரசினர் விஞ்ஞானக் கல்லூரி, கிறிஸ்து தேவாலயக் கல்லூரி மற்றும் மாத்தளை ஸ்ரீ சங்கமித்தா பெண்கள் தேசியப் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவதலைவர்களுக்கு பூ வெலிக்கடை இராணுவ சமிஞ்சை படையணி பயிற்சி பாடசாலைக்கு அழைக்கப்பட்டு இந்த முழு நாள் வேலைத்திட்டம் இராணுவ சமிஞ்சை படையணி பாடசாலை மற்றும் தகவல் தொழிநுட்ப பணியகத்தின் ஒருங்கிணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மாத்தளை புனித தோமையர் கல்லூரியின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தலைமைத்துவ குணங்கள் இராணுவத்திற்கு மட்டுமல்ல, வெளி சமூகத்திற்கும் விலைமதிப்பற்ற சொத்து என்று வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது, ஏனெனில் தலைமை ஒழுக்கம், சுய வளர்ச்சி, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, அக்கறை, ஊக்கம், நடத்தை என்ற துணை காரணிகள் உயர் தரங்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.

அதன்படி, இராணுவத் தளபதியின் கருத்தாக்கம் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, சமிஞ்சை படையணி பயிற்சி பாடசாலையானது, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவத்தலைவர்களுக்கு அத்தகைய தலைமைத்துவப் பயிற்சியை மேற்கொள்வதற்காக, அடிப்படை அடித்தளத்தை வழங்குவதல் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தின் தூண்களாகவும் திகழ்கின்றனர்.

இவ்வாறு, தலைமைத்துவப் பயிற்சியின் தொழில்நுட்பம், 'அலைந்து திரிவதன் மூலம் நிர்வகித்தல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சமிஞ்சை படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி கேணல் பி.டி பெர்னாண்டோ வரவேற்பு உரையை நிகழ்த்தி நிகழ்ச்சியை திட்டமிட்டபடி ஆரம்பித்ததுடன், ஆரம்ப விழாவில் 221 வது பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ ரத்நாயக்க மற்றும் மாத்தளை புனித தோமையர் கல்லூரியின் அதிபர் தம்மிக்க ஹேவாவசம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பயிற்சித் திட்டத்தின் போது, இளைய தலைமைத்துவ கூறுகளின் கீழ் அவர்களின் சரியான முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் உட்பட பல்வேறு தலைப்புகள் கற்பிக்கப்பட்டன. அவர்களின் அறிவு, திறன்கள், நேர்மறை சிந்தனை பற்றிய புரிதல் போன்றவற்றை விரிவுபடுத்துவதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மாத்தளை புனித தோமையர் கல்லூரியின் அதிபர் திரு தம்மிக்க ஹேவாவசம் மற்றும் ஏனைய கல்லூரிகளின் ஆசிரியர்களும் நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு இராணுவ சமிஞ்சை படையணி பயிற்சி பாடசாலை வழங்கும் விரிவுரைகள், செயற்பாடுகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றைப் பாராட்டினர்.