Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2022 20:00:44 Hours

யாழ்.கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் இறுதிப் போட்டியில் கலைமதி விளையாட்டுக் கழகம் வெற்றி

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட்டின் ஏற்பாட்டில் கரவெட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் எட்டு சிவில் கழகங்கள் பங்குபற்றிய உதைபந்தாட்டப் போட்டிகள் கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின்படி 55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் மேற்பார்வையில் நடைப்பெற்றன.

மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் சவால் கிண்ணம் -2022' போட்டியில் யாழ்ப்பாணம் கலைமதி விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரர்களால் 100,000 ரூபாய் பணப் பரிசு வெல்லப்பட்டது.

ஒக்டோபர் 25 ஆம் திகதி நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக பருத்தித்துறை மேயர் திரு ஜோசப் இருதயராஜா கலந்து கொண்டார். வடமராட்சி கால்பந்தாட்ட போட்டியின் கீழ் எட்டு முன்னணி அணிகள் நொக்-அவுட் அடிப்படையில் இப்போட்டியில் பங்குகொண்டன.

மிகவும் கடுமையான போட்டியின் பின்னர் இறுதிச் போட்டியில் சிவானந்தன் விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் 'விஷ் நடராஜா கிண்ணம்' மற்றும் பணப்பரிசாக ரூ. 50,000 பெற்றனர். வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்த இரு அணிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய அணிகளுக்கும் தலா ரூபாய் 10,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ரம்ய குமாரவின் ஆதரவுடன் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்க அவர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தார். மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் மற்றும் திரு விஷ் நடராஜா ஆகியோர் போட்டிக்கு அனுசரணை வழங்கினர். மேலும் இப்போட்டிக்கு பெப்சி நிறுவனம் இணை அனுசரணை வழங்கியது.

பிரதேச செயலாளர்கள், வடக்கு முன்னரங்க பராமரிப்பு பிரதேச தளபதி, 55 மற்றும் 51 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், 551, 552 மற்றும் 553 வது பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிவில் அழைப்பாளர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர். இறுதிப்போட்டி மற்றும் கால்பந்தாட்ட போட்டி தொடரினை ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கண்டுகளித்தனர்.