Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2022 16:16:28 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி 'திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் ' செயலமர்வின் 2 ஆம் கட்டம் நிறைவு

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற 'திறன் அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம்' தொடர்பான 2 ஆம் கட்ட செயலமர்வில் பங்குபற்றிய மேலும் 31 சிப்பாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பாவின் எண்ணக்கருவுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வு எதிர்வரும் வருடத்தில் திட்டமிடப்பட்ட நிறுவன இலக்குகளை அடையும் நோக்கில் செப்டம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மறுசுழற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் புதுமைகளை வளர்ப்பதில் தேவையான அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பயிற்சி அமர்வுகள், குழு நடவடிக்கைகள், கழிவு மேலாண்மை, ஆன்மீக தியானம், மின்வொட்டு, பூச்சு பூசுதல் மற்றும் தச்சு போன்ற புதுமையான செயல்பாடுகளை உள்ளடக்கிய 21 நாட்கள் செயலமர்வாக இது நடைபெற்றது.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி அவர்களினால் செயலமர்வை வெற்றிகரமாக நிறைவு செய்த இராணுவ சிப்பாய்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதித் தளபதியும் கலந்துகொண்டார்.

அதன் பிறகு, செயலமர்வில் பங்கேற்பாளர்கள் இச் செயலமர்வின் போது பெற்ற அறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலோக கட்டில்கள், விரிவுரை மேசை, சக்கர வண்டிகள், மெட்டல் டிவி ஸ்டாண்டுகள், ஏர் கம்ப்ரசர்கள், டிரஸ்ஸிங் டேபிள்கள், விளக்குகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் மர நாற்காலிகள் போன்ற புதிய உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தினர்.

இச் சான்றிதல் வழங்கும் விழாவில் முதன்மை பணியாளர்கள், பயிற்சி பரிசோதகர்கள், பிரிகேடியர் நிர்வாகம், பிரிகேடியர் வழங்கல், கேணல் பயிற்சி மற்றும் கேணல் பொறியியல், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.