Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2022 16:22:44 Hours

யாழ். படையினருக்கு சமையல் பயிற்சி பாடநெறி

யாழ். குடாநாட்டில் சேவையாற்றும் சமையல் செயன்முறைகளில் ஆர்வமுள்ள படையினருக்கு, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், செப்டம்பர் 20 ஆம் திகதி தல்செவன இராணுவ ஓய்வு விடுதியில் அடிப்படை சமையல் பாடநெறி நடைப்பெற்றது.

மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய உணவு வகைகளில் 35 நாட்கள் பாடநெறியில் கலந்து கொண்ட 19 சிப்பாய்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2022 அக்டோபர் 25 ஆம் திகதி தல்செவன இராணுவ ஓய்வு விடுதியில் ஆரம்பமாகியதுடன் இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் இந் நிகழ்வில் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அனுர பண்டார மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.