Header

Sri Lanka Army

Defender of the Nation

27th October 2022 16:31:31 Hours

இராணுவ செபக் டக்ராவ் வீரர்கள் நான்கு சம்பியன்ஷிப்களை வென்றனர்

ஒக்டோபர் 22 முதல் 23 வரை கண்டி மாநகர சபை மைதானத்தில் 6 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற 16வது தேசிய செபக் தக்ராவ் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவப் போட்டியாளர்கள் 4 சம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். ஆண்கள் ஹூப்ஸ், பெண்கள் ரெகு, பெண்கள் ஹூப் மற்றும் பெண்கள இரட்டையர் சாம்பியன்ஷிப்களை இராணுவப் பெண்கள் (ஏ அணி) வென்றதுடன் மற்றும் இராணுவ ஆண்கள் (ஏ அணி) இரண்டாம் இடத்தை வென்றது. இராணுவப் பெண்கள் (பி அணி) இதேபோல் முறையே ஹூப், ரெகு மற்றும் இரட்டையர் போட்டிகளில் இரண்டாம் இடங்களை வென்றதுடன், மொத்தம் 6 பிரிவுகளிலும், இராணுவ வீரர்கள் 4 சம்பியன்ஷிப்களை கைப்பற்றினர்.

இராணுவ செபக் தக்ராவ் குழுவின் தலைவர் பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இந்த அணி சம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டது.

செபக் தக்ராவ் என்பது கால்களால் விளையாடும் கரப்பந்து போன்ற விளையாட்டாகும், இதில் வீரர்கள் தங்கள் கால்கள், முழங்கால், மார்பு மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி பந்தை கையாள வேண்டும். விளையாட்டின் விதிகள் மற்றும் விதிமுறைகள் கரப்பந்துக்கு மிகவும் ஒத்தவையாகும். தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு, இந்த விளையாட்டு பிரம்புகளால் அல்லது செயற்கை மூலப் பொருட்களால் ஆன பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது. 1990 முதல், செபக் தக்ராவ் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஷிப்பின் போது பின்வரும் வீரர்கள் சிறந்த வீரர்களாக இடம்பிடித்துள்ளனர்:

சிறந்த ஹூப் வீரர் (ஆண்) - சிப்பாய் எச்டிஆர் சந்தருவன்

சிறந்த ஹூப் வீரர் (பெண்) - லான்ஸ் கோப்ரல் எஸ் கம்பத்திரன

சிறந்த அறைதல் வீரர் (ஆண்) - லான்ஸ் கோப்ரல் ஜே.டி.பி சில்வா

சிறந்த அறைதல் வீரர் (பெண்) - சிப்பாய் டபிள்யுஜிஓஎஸ் ஜயம்பதி

சிறந்த ஊட்ட வீரர் (பெண்) - லான்ஸ் கோப்ரல் கே.டி.என்.பி கருணாரத்ன

சிறந்த டெகாங் வீரர் (பெண்) – பெண் சிப்பாய் என் மதுஷானி