Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2022 20:30:50 Hours

வைத்தியசாலை வளாகத்தில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ‘பசுமைத் தோட்டம்’

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது படைப்பிரிவின் கீழுள்ள 543 வது பிரிகேடின் 11 வது இலங்கை பீரங்கி படையணி படையினரின் ஒத்துழைப்புடன் தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சனோஜ் பெர்னாண்டோ அவர்கள் ‘பசுமைத் தோட்டத்தை’ ஆரம்பித்தார். தலைமன்னார் பிரதேச வைத்தியசாலை வளாகத்தினுள் பல மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மரக்கறிகள் மற்றும் கிழங்குகள் உள்ளடக்கிய இந்த இயற்கை பயிர்ச்செய்கையின் முதல் அறுவடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது.

பசுமை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தளபதியின் கருத்திற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், மாவட்ட வைத்திய அதிகாரியின் வேண்டுகோளின் பேரில், 543 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார ஹரஸ்கம அவர்களினால் படையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

வைத்தியசாலை வளாகத்தில் பயிரிடப்பட்ட விங்ஸ் பீன்ஸ், நீள பீன்ஸ், நிலக்கடலை, கத்தரி, வெண்டைக்காய், மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றின் அபரிமிதமான அறுவடை இவ்வாறு அறுவடை செய்யப்பட்டு, வைத்தியர் சனோஜ் பெர்னாண்டோவிடம் வழங்கப்பட்டதுடன், சிகிச்சை பெறும் நோயாளிகளின் நுகர்வுக்காக வழங்கப்பட்டன.அறுவடை நிகழ்வில் பிரிகேடியர் துஷார ஹரஸ்கம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

11 வது இலங்கை பீரங்கி படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் P.G.T.U.B. ஜயரத்ன, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வேனோடன் தர்மராஜன், மன்னார் சுகாதார சேவையின் பிரதிப் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் மிஸ் நிஷாந்தி, மன்னார் பிராந்திய பல் வைத்தியர் ஸ்ரீதேவி வேதவனம், மன்னார் வைத்திய திட்டமிடல் அதிகாரி வைத்தியர் டென்னி, தலைமன்னார் வைத்தியசாலை பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் சனோஜ் பெர்னாண்டோ, மற்றும் படையினர் அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டனர்.