Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2022 17:43:13 Hours

541 வது பிரிகேட் படையினரால் மன்னாரில் 100 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

மன்னார் பிரதேசத்திலுள்ள ஜோசப் வாஸ் மகா வித்தியாலயம், இலுப்பகடவாய் அரச தமிழ் கலவன் பாடசாலை, அந்தோணிபுரம் அரச தமிழ்க் கலவன் பாடசாலை, முண்டம்பிடி தமிழ் கலவன் பாடசாலை, கூறை தமிழ் கலவன் பாடசாலை, கல்லியடி தமிழ் கலவன் பாடசாலை, கோவில்குளம் தமிழ் கலவன் பாடசாலை, அலிகார் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 100 வறிய மாணவர்களுக்கு 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்களின் பெருந்தன்மையால் பாடசாலை உபகரணங்களும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

54 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க 541 வது பிரிகேட்டின் 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினரால் செவ்வாய்க்கிழமை (11) நன்கொடையாளர் 541 வது பிரிகேட் தளபதியுடன் தனித்தனியாக அந்தப் பாடசாலைகளுக்குச் சென்று நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டர்.

குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், 541 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்க அவர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி மற்றும் பெற்றோர்கள் இவ் நன்கொடைவழங்கல் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.