Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2022 09:25:36 Hours

இராணுவத் தலைமையகத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிய நூலகம் திறந்து வைப்பு

இராணுவத் தலைமையகத்தின் நீண்டகாலத் தேவையை நிவர்திசெய்யும் நிமித்தம் கற்றல் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் திறன்களை பகிர்ந்து கொள்வதற்காக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நூலக முகாமைத்துவத்தில் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி நவீன வசதிகளுடனான புதிய நூலகம் காலை (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

9000 இற்கும் மேற்பட்ட அவசியமான புத்தகங்கள் உள்ளடக்கிய இந்த புதிய நூலகத்தை அமைப்பதற்கான கருத்தியல் வழிகாட்டலின் பின்னணியில் இருந்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இப் புதிய நூலகத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்காக வருகை தந்தார். பார்கோடிங் மற்றும் எலக்ட்ரானிக் வகைப்படுத்தலுடன் உலகப் புகழ்பெற்ற 'கோஹா' நூலக மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த இலங்கை தேசிய நூலக சபையின் ஆலோசனையுடன் இப் புதிய நூலகம் 40 நாட்களுக்குள் அமைக்கப்பட்டது.

அன்றைய அதிதியை, பொது பணி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி பிஎஸ்சி மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே யுஎஸ்பி பிஎஸ்சி ஆகியோர் வரவேற்றனர்.

கொத்தலாவை பாதுகாப்பு கல்லூரியின் இலத்திரனியல் நூலகத்திற்கும் இந்த நூலகத்தில் இருந்து இலவச வசதிகள் வழங்கப்படும் என்பதோடு புதிய முக்கிய நூலகத்தினை பிரதம அதிதி நினைவு பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார். அதன் பின்னர் அதிநவீன புதிய நூலகத்தின் செயல்பாட்டு அம்சம் மற்றும் அதன் நிர்வாக அம்சம் குறித்த விளக்கக்காட்சியும் அன்றைய நிகழ்வில் முன் வைக்கப்பட்டது.

பொது பணி பணிப்பாளர் நாயகம் அவர்களால் நூலக உறுப்பினர் முதல் அட்டையானது லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வழங்கப்பட்டதுடன் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜே. கொடிதுவாக்கு ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு ,இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பயிற்சி பணிப்பாளர் அவர்களினால் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

அதே சந்தர்ப்பத்தில், MAS Slimtex நிறுவன பொது முகாமையாளர் திரு உதார விஜயசுந்தர அவர்கள் புதிய தலைமையகத்தில் இராணுவத்தின் முன்முயற்சியால் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான இராணுவ நூலகத்திற்கு ஒரு பெரிய தொகுப்பு புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவரது நல்லெண்ணச் செயலை இராணுவத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார்.

அடுத்ததாக, தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபையின் தலைவர் திரு நந்த தர்மரத்ன அவர்களின் நுணுக்கமான மற்றும் நிபுணத்துவ வழிகாட்டுதலின் விளைவாக நூலகத்தின் முழு செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, 'கொஹா' நூலக மேலாண்மை முறையை அறிமுகப்படுத்தியதற்காக அன்றைய பிரதம அதிதி அவருக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கி மிகவும் பாராட்டினார்.

பின்னர் லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் அனைத்து அழைப்பாளர்களும் புதிய நூலகத்தை பார்வையிட்டனர். தலைமை சமிக்ஞை அதிகாரி, பயிற்சி பணிப்பகம், செயல்பாட்டு பணிப்பகம், தகவல் தொழில்நுட்ப பணிப்பகம், போர்கருவி சேவை பணிப்பகம் மற்றும் போக்குவரத்து பணிப்பகம், பொறியாளர் சேவைகள் பணிப்பகம், மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் மற்றும் பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணிப்பகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

சேவையில் உள்ள அனைத்து படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுரவில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய நூலகத்தில் டிஜிட்டல் பிரதிகள், தகவல் குறிப்பு புத்தகங்கள், இலவச WiFi, புகைப்பட நகல் போன்ற வசதிகள் காணப்படுவதுடன் வாரத்தின் ஐந்து வேலை நாட்களும் இது திறக்கப்படும் என்பது குறிப்பிடதக்கதாகும்.