Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2022 05:47:11 Hours

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பல வசதிகளுடனான புதிய கட்டிடம் கிரித்தலையில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண படையினரின் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்காக கிரித்தலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளுடனான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று காலை (13) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இக்கட்டிடமானது படையினர் நலன்புரி நிறைவேற்று அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்எஸ் ஜெயவர்த்தன (ஓய்வு), அவர்களின் ஒருங்கிணைப்பில் எஐஎ காப்புறுதி கம்பனி லிமிடெட் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் அனுசரனையில் நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படையினர் தங்களின் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை பயன்படுத்தி நிர்வாகப் பிரிவு, உடற்பயிற்சி கூடம், பலநோக்கு மண்டபம், சமயலறை மற்றும் சலூன் ஆகியவற்றைக் கொண்டதாக காணப்படுகின்றது.

2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி வளாக நுழைவாயிலில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் டிஆர்டி சலே அவர்கள் இராணுவத் தளபதியை வரவேற்றதுடன் தளபதியினை கௌரவிக்கும் வகையில் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள் புதிய கட்டிடத்திற்கு முன்பாக இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றதுடன், சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்தும், நாடாவை வெட்டியும் புதிய கட்டிடத்தினை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்தார். இராணுவத் தளபதியும் அங்கிருந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்து கட்டிதத்தினை பார்வையிட்டதுடன் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படையினரின் முயற்சிகளையும் அவர்களின் வெற்றிகரமான சாதனைகளையும் பாராட்டினார்.

முன்னாள் கட்டளை அதிகாரிகள் மற்றும் தற்போதைய கட்டளை அதிகாரி மேஜர் என்பிஇஎன் நெரங்கம ஆகியோரின் கூட்டு முயற்சியால் இப் புதிய பல வசதிகள் கொண்ட கட்டிடம் என்ற கனவு நனவாகியுள்ளது.

அன்றைய விழாவின் இறுதிப் பகுதியாக புதிய கட்டிடத்தின் முன் மரக்கன்று நாட்டுதல், குழு புகைப்படம் எடுத்தல், 2 வது இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கையொப்பமிடல் என்பனவும் இடம்பெற்றன.

இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி படைத் தளபதி அன்றைய தினத்தில் அதிக வேலைப்பளுவின் மத்தியிலும் இந் நிகழ்விற்கு வருகை தந்தமை குறித்து லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு நன்றி பாரட்டியதுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்என் ஜயவர்தன ஆர்டப்ள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் மெத்தானந்த யுஎஸ்பீ வடக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி பிரிகேடியர் ஏசிஏ டி சொய்சா எல்பி இராணுவத் தலைமையக ஒழுக்கப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பிஎல்ஆர் பமுனுசிங்க, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.