Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2022 15:00:10 Hours

இயந்திர காலாட் படையணியில் அதிகாரிகள் மற்றும் படையினர் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி

கற்பிட்டி கள சூட்டு களத்தில் தொடர்ந்து 4 நாட்கள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பயிற்சி நிறைவானது வெள்ளிக்கிழமை (30) இடம் பெற்றது. இப்பயிற்சியில் பல படையணிகளை பிரதிநிதித்துவபடுத்தி 146 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.

வவுனியா, பெரியதம்பனை இயந்திர காலாட் படையணி பயிற்சி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டு நிகழ்வானது சுமார் 7 வருடங்கள் நடைப்பெறாத நிலையில், இளம் அதிகாரிகள் பாடநெறி (2022) அதிகாரிகள், கவச வாகனங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பாடநெறியில் கலந்துகொண்டவர்கள் பங்குபற்றினர். இரண்டு பிஎம்பி எம்கே II கவச வாகனங்கள், இரண்டு டீ 89 வீபீஐ கவச வாகனங்கள், ஒரு டப்ள்யுஎம்இசெட் 551 பி கவச வாகனம், 30 எம்எம் துப்பாக்கிகள், 12.7 எம்எம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (ஏஏஎம்ஜி வகை கியுஜேசீ 88), 7.62 மிமீ பீகேடீ ஆயுதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் துப்பாக்கிச் சூட்டு பயிற்சிகள் இடம்பெற்றன.

இயந்திர காலாட் படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இயந்திர காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் தளபதி அவர்களின் நெருக்கமாகக் கண்காணிப்பில் இப்பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இயந்திர காலாட் படையணி பயிற்சி நிலையத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் மேஜர் ஜீவன் ரணசிங்க இந்த பயிற்சி திட்டத்தை ஒருங்கிணைத்தார்.

இலங்கை இராணுவத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வில் 146 பங்கேற்பாளர்கள் பங்கேற்ற முதல் நிகழ்வு இதுவாகும்.