Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2022 14:30:38 Hours

24 வது படைப் பிரிவின் தளபதிக்கு பிரியாவிடை

24 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைகளுக்கமைய 24 வது படைப் பிரிவின் தலைமையக வளாகத்தில் உத்தியோகபூர்வ பிரியாவிடை ஞாயிற்றுக்கிழமை (2) வழங்கப்பட்டது.

24 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு படைப்பிரிவின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை அணிவகுப்பு மரியாதை, அதிகாரிகளுடன் குழு படம் எடுத்தல் மற்றும் அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரம் என்பன இடம்பெற்றன.

பதவி விலகும் படைத்பிரிவு தளபதிக்கு நிகழ்வின் முடிவில் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், கேணல் பொது பணி, கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.