Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2022 12:49:04 Hours

51 வது படைப்பிரிவிற்கு புதிய தளபதி கடமை ஏற்பு

இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ அவர்கள் யாழ். கோப்பாயில் அமைந்துள்ள 51 வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக வௌ்ளிக்கிழமை (7) கடமை பொறுபேற்றுக்கொண்டார்.

இப் படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதி அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 10 வது இலங்கை பீரங்கி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அவர்கள் மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதனையடுத்து, மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ படைப்பிரிவு வளாகத்தில் மாங்கன்று ஒன்றையும் நாட்டினார்.

அதன்பின், புதிய தளபதி 51 வது படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 51 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.