Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2022 12:58:41 Hours

கிழக்கில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பௌத்த பிக்குவின் ஆதரவுடன் மதிய உணவு

இராணுவ ஆண்டுவிழா மற்றும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முயற்சியினால் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையின் தலைவர் தலகல, ஹொரண வண. தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர் அவர்களின் அனுசரணையுடன் பொலன்னறுவை / திம்புலாகல கஷ்ஷபா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை (03) மதிய உணவு வழங்கப்பட்டது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதல்களின் கீழ், 09 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் மேற்படி பாடசாலை வளாகத்தில் இந்த விசேட மதிய உணவை ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து 550 மாணவர்களும், 32 ஆசிரியர்களும் ஊழியர்களுடன் மதிய உணவு உபசரிப்பில் பங்கேற்றியதுடன் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (03) மட்டக்களப்பு / ஊத்துச்சினை வீரநகர் வித்தியாலய வளாகத்தில் 12 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி படையினர் விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

160 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் ஊழியர்களுடன், மதிய உணவு உபசரிப்பினை மகிழ்ந்தனர். பல்லேகல நாலந்த பௌத்த பாடசாலையின் அதிபர் வண கேடகும்புரே தர்மராம தேரர், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் இரண்டு விநியோக விழாக்களிலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 12 வது இலங்கை தேசிய காவலர் படையணியின் கட்டளை அதிகாரி பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நன்கொடையாளரான பௌத்த பிக்கு வண. கெட்டகும்புரே தர்மராம தேரரின் பிரதிநிதிகள், பல்லேகல நாலந்த பௌத்த பாடசாலையின் அதிபர் ஆகியோரும் இந்த விநியோக நிகழ்வில் கலந்துகொண்டனர்.