Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2022 13:01:17 Hours

பதவிய பிரதேசத்தில் "பெஹேசரணி" சமூக நிகழ்ச்சி திட்டம் ஏற்பாடு

62 வது படைப் பிரிவின் வேண்டுகோளிற்கமைய எஹெதுகஸ்வெவ கல்லூரி மற்றும் பதவி ஸ்ரீபுர டிராக் 11,12 சமன்புர கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான சமூக நலன் சார்ந்த விரிவுரை நிகழ்வு 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி மேற் கொள்ளப்பட்டது. திரு பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் அவரது குழுவினரின் முயற்சியால் முனனெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான அனுசரணையானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மனநலப் பிரிவின் வைத்தியர் தினுகா வீரசிங்க அவர்களினால் நடத்தப்பட்ட உளவியல் விரிவுரையின் ஊடாக ‘பெஹசரணி 2022’ என்ற செயற்திட்டமானது பெண் மாணவர்களுக்கு ‘மாதவிடாய் மற்றும் இளமைப் பருவத்தின் மனோநிலை’ என்ற தலைப்பில் இடம் பெற்றதுடன், இத்திட்டத்தின் கீழ் 250 சிறுமிகள் ரூபா 530,000/= பெறுமதியான சுகாதார பொதிகளை இலவசமாக பெற்றுக் கொண்டனர்.

62 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களினால் , 622 வது பிரிகேட் தளபதி கேணல் ஏனோஜ் ஹேரத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன். லெப்டினன் கேணல் எம்.எஸ்.முனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின்படி 9 வது கஜபா படையணி படையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.