Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2022 13:23:53 Hours

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி கள விஜயம்

அண்மையில் நியமிக்கப்பட்ட கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த தனது கட்டளையின் கீழ் அமைந்துள்ள படையணிகளுக்கு செப்டம்பர் 27-29 திகதிகளில் முறையான கள விஜயங்களை மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி 3 வது இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி படையினர், 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையினர், 3 வது பொறியியளார் சேவை படையணி படையினர், 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி மற்றும் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி படையினருடன் உரையாடியதுடன் அவர்களின் நலன் மற்றும் ஏனைய நிர்வாக விடயங்கள் குறித்து விசாரித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பகுதி அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.