Header

Sri Lanka Army

Defender of the Nation

09th October 2022 18:00:39 Hours

வன்னி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் பாதுகாப்புப் பணி திறன்களைப் புதுப்பிப்பு

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கே அவர்களின் வழிகாட்டுதலின்படி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினருக்கான எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு திறன், ஜீபிஎஸ் கையளுதல், தற்காப்புக் கலைகள், பாதுகாப்பு முறைகள், ஆயுதமற்ற போர்யுத்திகள், விஐபி பாதுகாப்பு, வெடிபொருட்கள் அறிமுகப்படுத்துதல், ஆயுதங்களைக் கையாளுதல், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், துப்பாக்கிச் சூடு, ஒருங்கினணப்பு நியதிகள், சமூக இயக்க நடைமுறைகள் மற்றும் உள்ளக பாதுகாப்பு ஆகியவை பற்றிய அறிவைப் புதுப்பிக்கும் சிறப்பு அணி பயிற்சி பம்பைமடுவில் அமைந்துள்ள பட்டாலியன் பயிற்சி பாடசாலையில் 2022 ஓகஸ்ட் 22 முதல் 2022 ஒக்டோபர் 03, வரை இடம் பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம், 56 வது படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பாடநெறியின் நிறைவுரை இடம்பெற்றன.

20 வது கஜபா படையணியின் லெப்டினன் யுஎம்டிகே டி சில்வா உட்பட அதிகாரிகள் மற்றும் படையினர் சிறந்த படைப்பிரிவு தளபதிக்கான விருதை வென்றதுடன் 10 வது (தொ) கெமுணு ஹேவா படையணியின் கோப்ரல் பிரேமசிறி சகல சுற்று வீரருக்கான வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. 2 வது இயந்திரயவியல் காலாட் படையணியின் சாதாரண சிப்பாய் எம்.சந்தருவன் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராகவும், 9 வது கஜபா படையணியின் சாதாரண சிப்பாய் அமரசேன சிறந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருக்கான விருதையும் வென்றார்.

மேலும், 54 வது படைப்பிரிவு (சிறந்த 8 பேர் கொண்ட அணி) சிறந்த படைப்பிரிவுக்கான வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.