Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2022 21:54:42 Hours

இராணுவ நீச்சல் வீரர்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சாம்பியன்ஷிப்பை வெல்வதற்காக அட்டவணைகளைத் திருப்புகின்றனர்

சுகததாச விளையாட்டு அரங்க நீச்சல் தடாகத்தில் நான்கு நாட்கள் (ஒக்டோபர் 4-7) நடைபெற்ற இலங்கை நீர் விளையாட்டு ஒன்றியம் (SLASU) ஏற்பாடு செய்த தேசிய மற்றும் கனிஷ்ட தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்-2022 இல் இலங்கை இராணுவ நீச்சல் வீரர்கள் உறுதியான வெற்றியைப் பெற்றனர்.

சாத்தியமற்றது எதுவுமில்லை என்பதை நிரூபித்த இலங்கை இராணுவ நீச்சல் வீரர்கள், 18 புள்ளிகள் முன்னிலையுடன் கில்லர் வேல் அக்வாடிக்ஸ் அணியின் 5 வருட ஆட்சியை முறியடித்து 16 வருடங்களின் பின்னர் 322 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த ஆண்களுக்கான தேசிய சம்பியன்ஷிப்பை வென்று அசத்தியுள்ளனர். பயிற்சியாளர் மேஜர் ரொஷான் பீரிஸின் வழிகாட்டலின் கீழ் 15 நீச்சல் வீரர்களுடன் இலங்கை இராணுவம் சம்பியன்ஷிப்பை வென்றது. கில்லர் வேல் அக்வாடிக்ஸ் அணி இலங்கை இராணுவத்தை விட 26 புள்ளிகள் முன்னிலையில் இறுதி நாளில் நுழைந்தது, இறுதியில் இராணுவ நீச்சல் வீரர்கள் அட்டவணையை எவ்வாறு திருப்ப முடியும் என்பதை எடுத்துக் காட்டினார்கள்.

தேசிய தனிநபர் சாம்பியன்ஷிப்பை இராணுவத்தின் 5 (தொ) கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன் எச்டி.அகலங்க பீரிஸ் மற்றும் கில்லர் வேல் அக்வாடிக்ஸ் அணியின் ராமுடி சமரகோன் ஆகியோர் வென்றனர். இரு நீச்சல் வீரர்களும் தலா 5 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் தலா ஒரு புதிய தேசிய சாதனையை நிறுவியதன் மூலம் சிறந்த நீச்சல் வீரர்கள் என்ற பட்டத்தை சொந்தமாக்கினர். லெப்டினன்ட் அகலங்க பீரிஸ் 2வது நாளில் ஆண்களுக்கான 50 மீ பேக்ஸ்ட்ரோக் போட்டியில் 26.12 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை நிறுவினார், காமன்வெல்த் விளையாட்டு 2022 இல் நிகழ்த்தப்பட்ட அவரது முந்தைய சாதனையை முறியடித்தார்.

இராணுவ நீச்சல் வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் 17 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். போட்டியில் 64 நீச்சல் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 316 நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பெற்ற வெற்றியைக் கேட்டு இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவரும் இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களுக்கு உத்வேகம் அளித்து, அந்த அணி வீரர்களுக்கு பயிற்சியளித்து மிகவும் தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய அனைவரையும் வாழ்த்தினர்.

வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வெள்ளிக்கிழமை (7) சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

தொடர்ந்து 3 வது தேசிய சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்ட கொழும்பு விசாகா வித்தியாலயம் மகளிர் தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 211 புள்ளிகளுடன் வெற்றி பெற்றதுடன், ஆண்கள் கனிஷ்ட தேசிய சம்பியன்ஷிப் போட்டியில் 173 புள்ளிகளுடன் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பெண்கள் கனிஷ்ட தேசிய சம்பியன்ஷிப் பட்டத்தை மொத்தம் 128 புள்ளிகளைப் பெற்று கொழும்பு 07 சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் பெற்றது.