Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2022 13:30:53 Hours

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 552 வது பிரிகேட் படையினரால் இரத்த தானம்

எதிர்வரும் 73 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 55 வது படைப்பிரிவு, 552 வது பிரிகேடின் 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் செவ்வாய்கிழமை (4) முகமாலை 23 வது கெமுனு ஹேவா படையணியின் வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை முன்னெடுத்தனர்.

யாழ் குடாநாட்டில் உள்ள நோயாளர்களின் சார்பாக 55 வது படைப்பிரிவின் அனைத்து கட்டளைப் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 120 இற்கும் மேற்பட்ட படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள நோயாளர்களின் இரத்த குறைப்பாட்டை கருத்திற் கொண்டு இந்த மனிதாபிமான பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

இத் திட்டமானது யாழ் வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இராணுவத்தின் சிவில் சமூகத்திற்கான இராணுவ உதவி எனும் கருத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தம் தேவையின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவசர சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கு இரத்தத்தின் தேவையை பூர்த்தி செய்யுமாறு பிரதேச இரத்த நிலையத்தினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கமைய இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய குழு மற்றும் உதவியாளர்களின் ஒத்துழைப்புடன் 552 வது பிரிகேடில் உள்ள மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன், 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்ஆர்பி ரத்நாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் 23 வது கெமுனு ஹேவா படையணியின் படையணியினரால் இத் திட்டம் ஒருங்கமைக்கப்பட்டது.