Header

Sri Lanka Army

Defender of the Nation

06th October 2022 13:10:53 Hours

66 வது படைப் பிரிவு தலைமையகத்தின் புதிய கட்டிடம் நிர்மாணிப்பு

நந்திக்கடல் 66 ஆவது படைத் தலைமையகம் திங்கட்கிழமை (3) தனது படைத் தலைமையகத்தின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 66 வது படைத் தலைமையகத்திற்கு சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் அன்மையில் திறந்து வைக்கப்பட்டது.

66 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே.பிரியதர்ஷன அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

புதிய கட்டிடத் தொகுதியில் தையல், சலூன் மற்றும் முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடமும் அமைந்துள்ளதுடன், மேலும் வேறு சில பயன்பாட்டிற்காக பயன்படுத்தக்கூடியவாறு இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் புதிய கட்டிடத்தை 66 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.