Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2022 14:00:52 Hours

இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒரு சிப்பாய்க்கு புதிய வீடு

தம்புலுஹல்மில்லவெவவில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் சிப்பாய்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் அம்பலாங்கொடை, கொஸ்கொடவில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணியின் கோப்ரல் ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை (2) ஒரு புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பதவி நிலை பிரதானியும் இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் கருத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமாக ஐந்து புதிய வீடுகளை நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதே திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த இரண்டாவது வீட்டை இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆகியோர் படையணியின் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

1வது இயந்திரவியல் காலாட் படையணியை சேர்ந்த குறித்த பயனாளி எதிர்கொண்ட நிதிச் சிக்கல் காரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி அவரது சொந்த படையணி சிப்பாய்கள் புதிய வீட்டைக் கட்டுவதற்கான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களுடன் மனிதவளத்தை வழங்கினர்.

கொஸ்கொடவில் நடைபெற்ற இந்த வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஸ்வர்ணமாலி ஏகநாயக்க, இயந்திரவியல் காலாட் படையணி சேலை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏசீஆர் திலகரத்ன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.