Header

Sri Lanka Army

Defender of the Nation

04th October 2022 15:52:43 Hours

விடைப் பெற்று செல்லும் படைத் தளபதிக்கு 22 வது படைப்பிரிவினரால் பாராட்டு

விடைப் பெற்று செல்லும் 22 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார அவர்களுக்கு புதன்கிழமை (28) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இராணுவ சம்பிரதாய முறைகளுக்கு ஏற்ப மரியாதை செலுத்தப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதிக்கு நுலைவாயில் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மைதானத்தில் இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் தலைமையக வளாகத்தில் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வின் பின்னர், 22 வது படைப் பிரிவின் தளபதிக்கு மதிய உணவு விருந்துபசாரம் வழங்கப்பட்டதுடன், 22 வது படைப் பிரிவின் அனைத்து படையினர்களின் சார்பாக அவருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

இப் பிரியாவிடை நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 23 மற்றும் 24 வது படைப் பிரிவுகளின் தளபதிகள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி அதிகாரி , அனைத்து பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் ஆகியோர் இணைந்திருந்தனர்.