Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2022 20:11:11 Hours

2022 ஆம் ஆண்டிற்கான 'இராணுவ மரதன் ஓட்டப் போட்டி பதவி நிலை பிரதானியினால் தொடங்கி வைப்பு

இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக இன்று காலை (2) ஆரம்பித்து வைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான 'இராணுவ மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த போட்டியில் இராணுவத்தின் 15 படையணிகளை சேர்ந்த 147 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவ விளையாட்டு போட்டி நாட்காட்டிக்கமைவாக, சுமார் 22 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய இந்த மரதன் ஓட்டப் போட்டியானது பத்தரமுல்லையில் தொடங்கி பனாகொட இராணுவ வளாகத்தில் நிறைவு பெற்றது.

இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் தலைமையிலான இலங்கை இராணுவ தடகளக் குழுவில், 15 பெண் ஓட்டப்பந்தய வீரர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வு காலை 6.00 மணியளவில் பத்தரமுல்ல தியத்த உயன வழியாக ஆரம்பமாகியதுடன் மாலபே, அதுருகிரிய, ஹபரகட, ஹை லெவல் வீதி வழியாக பனாகொட பனாகொட உடற்பயிற்சி கூடத்திற்கு அருகாமையில் நிறைவு பெற்றது.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, இராணுவ தடகள குழுவின் செயலாளர் பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் ஓட்ட வீரர்களை வரவேற்பதற்காக விளையாட்டு ஆர்வலர்களுடன் நிறைவு பெறும் இடத்திற்கு வந்திருந்தனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தடகளக் குழுவின் செயலாளரினால் மரதன் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இராணுவ மரதன் ஓட்டப் போட்டி ஊடாக இன்றுவரை பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இராணுவ மரதன் ஓட்ட வீரர்களை நாட்டிற்கு உருவாக்கியுள்ளது. சர்வதேச தரத்திற்கு இணையாக நடத்தப்படும் இராணுவ மரதன் ஓட்டப் போட்டி பொதுவாக தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் குழுவால் மத்தியஸ்த்தம் செய்யப்படுவதுடன் இராணுவ தடகளக் குழுவினால் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

மரதன் ஓட்டப் போட்டி முடிவுகள் பின்வருமாறு;

முதலாமிடம் - (ஆண்கள்) - இலங்கை இராணுவ சேவைப் படையணி

முதலாமிடம் - (பெண்கள்) - இலங்கை இராணுவ மகளிர் படையணி ஏ அணி.

ஆண்கள் பிரிவு

முதலாமிடம் – பொம்படியர் கே.சம்முகேஸ்வரம் (இலங்கை இராணுவ பீரங்கி படையணி)

இரண்டாம் இடம் - கோப்ரல் பிகேஎஸ்எம்எஸ் குணசேகர (இலங்கை இராணுவ சிங்கப் படையணி)

மூன்றாம் இடம் - சிப்பாய் கேகேஎல் பிரமோத் (இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி)

பெண்கள் பிரிவு சிப்பாய் எச்எம்டபிள்யுபீடபிள்யு ஹேரத் (இலங்கை இராணுவ மகளிர் படையணி)

இரண்டாம் இடம் - சிப்பாய் எச்எம்பீ ஹேரத் (இலங்கை இராணுவ மகளிர் படையணி)

மூன்றாம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஏஎஸ்என் பண்டார (இலங்கை இராணுவ மகளிர் படையணி)