Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2022 11:37:19 Hours

படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி மற்றும் கள சூட்டு போட்டி நிறைவு

இராணுவ சிறு ஆயுத சங்கம் தியதலாவ துப்பாக்கி பயிற்சி பாடசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்த படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி – 2022 இன்று (30) பிற்பகல் நிறைவு பெற்றதுடன், இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டப்ளியுடீடப்ளியுஜீ இயலகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சர்வதேச தரத்திற்கு இணையாக துப்பாக்கி சுடும் துறையை விரிவுபடுத்தும் நிமித்தம் வருடம் தோரும் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி திறந்த, சேவை படையணிகள் மற்றும் புதியவர்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் 400 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு வீரர்கள் போட்டியிட்டனர். திறந்த துப்பாக்கி சுடுதல் போட்டி பிரிவில் போட்டியிட்டு கெமுனு ஹேவா படையணி சாம்பியன்ஷிப்பை வென்றது. இரண்டாம் இடத்தை கஜபா படையணியினரும், மூன்றாவது இடத்தை கொமாண்டோ படையணியினரும் பெற்று கொண்டனர்.

துப்பாக்கி சூட்டு போட்டியில் புதியவர்கள் பிரிவில், சாம்பியன்ஷிப்பை கெமுனு ஹேவா படையணியின் துப்பாக்கி சூட்டு வீரர்களும், இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே விஜயபாகு காலாட் படையணி மற்றும் படையணியின் துப்பாக்கி சூட்டு வீரர்கள் கைப்பற்றினர்.

துப்பாக்கி சூட்டு போட்டி சேவை படையணி பிரிவில் சம்பியனாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணி துப்பாக்கிச் சூட்டு வீரர்களும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் துப்பாக்கி சூட்டு வீரர்கள் 2ம் இடத்தையும் 3ம் இடத்தை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ங்களுக்குத் பெற்றனர்.

எவ்வாறாயினும், கெமுனு ஹேவா படையணியினர், (திறந்த பிரிவு) போட்டியில் கஜபா படையணி மற்றும் கொமாண்டோ படையணிகளின் துப்பாக்கி சூட்டு வீரர்களை 2 மற்றும் 3 வது இடங்களுக்குத் தள்ளி வெற்றியை தனதாக்கி கொண்டனர். புதியவர்கள் பிரிவில், கெமுனு ஹேவா படையணி துப்பாக்கி சூட்டாளர்கள் முதலாம் இடத்தையும், கஜபா படையணி மற்றும் கொமாண்டோ படையணியினர் 2வது மற்றும் 3வது வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

அதேபோன்று, படையணி பிரிவில் இலங்கை இராணுவ சேவைப் படையணி துப்பாக்கி சூட்டு வீரர்கள் சம்பியன்ஷிப்பை வென்றனர், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி துப்பாக்கி சூட்டு வீரர்கள் மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயற்திர பொறியியல் படையணியின் துப்பாக்கி சூட்டு வீரர்களும் 2 மற்றும் 3 ஆம் இடங்களுக்கு தள்ளப்பட்டனர்.

மேலும், கொமாண்டோ படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II பன்னஹகே பிஎம்ஆர்ஆர் திறந்த பிரிவில் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராகவும், கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ரத்நாயக்க ஆர்ஏஜிகே புதியவர்கள் பிரிவின் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராகவும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II மஞ்சநாயக்க எஸ்பீடிஎஸ் சேவை படையணி பிரிவின் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேபோன்று, துப்பாக்கிச் சூட்டு திறந்த பிரிவில் கெமுனு ஹேவா படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி I டபிள்யுபீஎன் தம்மிக்க சிறந்த துப்பாக்கி சுடும் வீரராகவும், புதியவர்கள் பிரிவில் கஜபா படையணியின் சிப்பாய் ஜயசிங்க டபிள்யூஜியுஎல் மற்றும் சேவை படையணி பிரிவில் பணிநிலை சார்ஜன் பிரியந்த குமார ஜிஜி அவர்களும் சிறந்த துப்பாக்கி சூட்டாளராக தெரிவு செய்யப்பட்டனர்.

இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் டபிள்யூடீடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ, பீஎஸ்சி அவர்களால் பிரதம அதிதியை தியத்தலாவ துப்பாக்கி சூட்டு களத்திற்கு வரவேற்றவுடன், அன்றைய பரிசளிப்பு விழா ஆரம்பமானது. பரிசில்கள் வழங்குவதற்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் துப்பாக்கிச் சூட்டு வீரர்களின் திறன்களை பறைச்சாற்றும் கண்காட்சி துப்பாக்கிச் சூட்டினை பார்வையிட அழைக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூடீடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யுபீ, ஆர்எஸ்பீ, பீஎஸ்சி அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. மேலும் அவர் பங்கேற்பாளர்களுக்கு அன்றைய முக்கியத்துவம் மற்றும் போட்டிகள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்வத்துடன் நடத்தப்பட்டது என்பது தொடர்பாகவும் விளக்கினார். பின்னர் 2022 ஆம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினத்தின் பிரதம அதிதி சாதனையாளர்களை பாராட்டி விருதுகளை வழங்கினார். இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜே கொடித்துவக்கு ஆர்டபிள்யுபீ,ஆர்எஸ்பீ என்டியு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிடி ரணசிங்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படையணிகளுக்கிடையிலான நடைமுறை துப்பாக்கி சூடு போட்டியில் இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் டபிள்யூபீ காரியவசம் அவர்கள் பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் பிரிவின் கீழ் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார்.

அதேபோன்று, 2022 க்கான பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் நிலைப் பிரிவில் கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் கேஎம்வி கொடித்துவக்கு அவர்கள் 2022 க்கான சிறந்த துப்பாக்கி சூட்டு வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் விருது மற்றும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். இராணுவ சிறு ஆயுத சங்கத்தின் செயலாளர் மேஜர் ஆர்.ஏ.டி.ஏ ரணசிங்க ஆர்டபிள்யுபீ பீஎஸ்சி அவர்கள் நன்றியுரையை வழங்கினார். அத்துடன் வண்ணமயமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அன்றைய நிகழ்வுகள் இடம் பெற்றன.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டீஜே கொடித்துவக்கு ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, துப்பாக்கி சுட்டு பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய பரிசளிப்பு நிகழ்வில் பங்குபற்றினர்.

இப்போட்டியில் பங்கேற்பாளர்கள் 9 கிமீ ஓட்டத்தை முடித்துக் கொண்டு 300 மீற்றர் இலக்கில் 10 ரவைகள், 200 மீற்றர் இலக்கில் 20 ரவைகள், 100 மீற்றர் இலக்கில் 10 ரவைகள் மற்றும் 50 மீற்றர் இலக்கில் 10 ரவைகள் சூடு நடத்தி இப் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைய தகுதி பெற்றனர். ‘படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சூட்டு போட்டி-2022’ துப்பாக்கி சுடும் திறன், படையலகுகளின் அனைத்து நிலைகளிடையே தோழமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும், இராணுவ சிறு ஆயுத சங்கம் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு தகுதிவாய்ந்த வீரர்களை தேர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு இப் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டி முடிவுகள் பின்வருமாறு

படையணிகளுக்கிடையிலான கள துப்பாக்கி சூட்டு போட்டி - 2022

1. திறந்த பிரிவு

அ. கெமுனு ஹேவா படையணி - ஷாம்பியன்

ஆ. கஜபா படையணி – இரண்டாம் இடம்

இ. கொமாண்டோ படையணி – மூன்றாம் இடம

2. புதியவர்கள் பிரிவு

அ. கெமுனு ஹேவா படையணி – ஷாம்பியன்

ஆ. விஜயபாகு காலாட் படையணி - இராண்டாம் இடம்

இ. கொமாண்டோ படையணி - மூன்றாம் இடம்

3 .சேவை படையணி பிரிவு

அ. இலங்கை இராணுவ பொலீஸ் படையணி – ஷாம்பியன்

ஆ. இலங்கை இராணுவ சேவைப் படையணி – இரண்டாம் இடம்

இ. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி – மூன்றாம் இடம்

4. சிறந்த துப்பாக்கி சுடுதல் (திறந்த பிரிவு) அதிகாரவனையற்ற அதிகாரி II பஸ்நாயக்க பீஎம்ஆர்ஆர் –கொமாண்டோ படையணி

5. சிறந்த துப்பாக்கி சுடுதல் (புதியவர்கள் பிரிவு) லான்ஸ் கோப்ரல் ரத்நாயக்க ஆர்எஜிகே (கெமுனு ஹேவா படையணி)

6. சிறந்த துப்பாக்கி சுடுதல் (சேவைப் படையணி பிரிவு) அதிகாரவனையற்ற அதிகாரி II மஞ்சநாயக்க எஸ்பீடிஎஸ் (இலங்கை இராணுவ பொலிஸ் படையணி)

படையணிகளுக்கிடையிலான துப்பாக்கி சுடும் போட்டி-2022

1 . திறத்த பிரிவு

அ. கெமுனு ஹேவா படையணி – ஷாம்பியன்

ஆ. கஜபா படையணி – இரண்டாம் இடம்

இ. கொமாண்டோ படையணி – மூன்றாவது இடம்

2. புதியவர்கள் பிரிவு

அ. கெமுனு ஹேவா படையணி – ஷாம்பியன்

ஆ. கஜபா படையணி – இரண்டாம் இடம்

இ. கொமாண்டோ படையணி – மூன்றாம் இடம்

3. சேவை படையணி பிரிவு

அ. இலங்கை இராணுவ சேவை படையணி – ஷாம்பியன்

ஆ. இலங்கை இராணுவ பொலிஸ் படையணி - இரண்டாம் இடம்

இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி - மூன்றாம் இடம்

4. சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் (திறந்த பிரிவு) அதிகாரவணையற்ற அதிகாரி I டபிள்யூ.பி.என் தம்மிக (கெமுனு ஹேவா படையணி)

5. சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் (திறந்த பிரிவு) சிப்பாய் ஜெயசிங்க டபிள்யூஜியுஎல் (கஜபா படையணி)

6. சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் (சேவை படையணி பிரிவு) – பணிநிலை சார்ஜன் பிரியந்த குமார ஜிஜி (இலங்கை இராணுவ சேவை படையணி)