Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2022 11:48:40 Hours

கொமாண்டோக்களின் குடும்பத்தில் உள்ள 12 உறுப்பினர்களுக்கு காணி அன்பளிப்பு

தாய்நாட்டின் பாதுகாவலர்களான கொமாண்டோக்களின் நிகரற்றசேவைகள் மற்றும் துணிச்சலான பணிகளை பாராட்டி, நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க சேவையினை கெளரவிக்கும் முகமாக களுத்துறையைச் சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்கள் கொமாண்டோ படையணியின் படையினருக்கு 148 பேர்ச்சஸ் காணியை பரிசாக வழங்கினர்.

களுத்துறை, பயகலவில் உள்ள அவர்களது தந்தை மற்றும் மூதாதையர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணி, ஒரே கும்பத்தை சேர்ந்த இலங்கை வங்கியின் முன்னாள் பிரதம சட்ட அதிகாரி சட்டத்தரணி திருமதி கயா ஜயசிங்க, மருத்துவ நிபுணர் வைத்தியர் ஒகாவாஸ் சந்திரபானு டி அல்விஸ் மற்றும் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரான திருமதி புஷ்பா வீரசிங்க ஆகியோரால் கொமாண்டோ படையணியின்1 அதிகாரி, 10 சிப்பாய்கள் மற்றும் கொமாண்டோ படையணியின் தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஒருவருக்கும் வழங்கப்பட்டன. இந் நன்கொடையை பெற்ற அனைவரும் இதுவரைக்கும் தங்களுக்கு சொந்த நிலம் இல்லமால் இருந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கதாகும்.

பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று (27) பிற்பகல் பயனாளிகளை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கான சொந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளின் 12 உறுதிப்பத்திரங்களை அனுசரனையாளர்களுடன் இணைந்து வழங்கிவைத்தார்.

இந்த நன்கொடையானது இராணுவத்தினரின் அயராத உழைப்பையும் மன உறுதியை அதிகரிப்பதுடன்அவர்களின் கடமைகள் கடினமானவை என்றும் லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அனுசரைனையாளர்களிடம் விரிவுரைத்தார். அத்துடன் அவர் நன்கொடையாளர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துகொண்டார்.

2019 ஆம் ஆண்டு இலங்கை வங்கியின் பிரதம சட்ட அதிகாரியாக கடமையாற்றிய வேளையில் திருமதி கயா ஜயசிங்க அவர்களின் காணிகளை இராணுவத்தினருக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான உன்னத எண்ணம் முன்வைக்கப்பட்டது, மேலும் அதே காலகட்டத்தில் இலங்கை வங்கியின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் லலந்த கமகே(ஓய்வு) அவர்களால் இத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. எவ்வாறாயினும், எதிர்பாராத சூழ்நிலைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 நோய்தொற்று காரணத்தால் அது சற்று தாமதமாக இடம்பெற்றது.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதியுடன் இணைந்து சட்டத்தரணி திருமதி கயா ஜயசிங்க, மற்றும் வைத்திய நிபுணர் வைத்தியர் ஒகாவாஸ் சந்திரபானு டி அல்விஸ் ஆகியோரும் இக் காணி பத்திரங்களை வழங்கினர்.

லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கொமாண்டோ படையணியின் தளபதி மற்றும் 1 வது படையணி தளபதி மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு ஞானரத்ன என்.டி.சி பி.எஸ்.சி ஆகியோரால் நன்கொடையாளர்களின் பெருந்தன்மையைப் பாராட்டி அவர்களுக்கு சிறப்பு நினைவு பாராட்டுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் அனைவரும் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முடிவில், கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு ஞானரத்ன என்.டி.சி பி.எஸ்.சி அவர்கள் இராணுவத்தின் நன்கொடையாளர்களுக்கு நாட்டைப் பாதுகாக்கும் இராணுத்தின் மீதான அவர்களின் சிந்தனை மற்றும் தாராள மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜேகொடித்துவக்கு ஆர்டபில்யுபி ஆர்எஸ்பி என்டியு பிஎஸ்சி , நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபில்யுடபில்யுடபில்யுஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபில்யுபி ஆர்எஸ்பி என்டியு பிஎஸ்சி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.