Header

Sri Lanka Army

Defender of the Nation

27th September 2022 16:56:29 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலையகத்தின் பலவீனமான மாணவர்களுக்கான ஆங்கில பாடநெறி திட்டம் ஆரம்பம்

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது சமூகம் சார் திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் தனது 'ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது அரசாங்கத் தமிழ்ப் பா்சதலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்காக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இராணுவ ஆங்கிலப் பயிற்றுவிப்பாளர்களால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்பித்தல் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு அம்பலம் டீ சந்தியில் இருந்து போக்குவரத்து வசதிகளும் படையினரால் வழங்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்புக்கள் 1400 மணி முதல் 1600 மணி ( 2 மணி முதல் 4 மணி வரை ) வரை நடாத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேற்குறிப்பிட்ட ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆங்கிலப் பயிற்றுவிப்பாளர் கெப்டன் ரோஷினி ரணசிங்க அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் படி அவர்களின் ஆங்கில மொழித் தரம் ஒப்பீட்டளவில் மோசமாக இருப்பது கருத்தில் கொண்டு திட்டம் முன்னெடுக்க தீர்மாணிக்கப்பட்டது.

அதன்படி, 511 படைப்பிரிவு இதுவரை 20 மாணவர்கள் பதிவு செய்துள்ளதுடன் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டியுடன் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. ஆரம்ப நிகழ்வில் பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்கள் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துகொண்டனர். யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் மற்றும் சிவில் சமூகத்தினரிடையே நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ண உணர்வுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கிறது.