Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2022 18:10:34 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கள விஜயம்

கள அமைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 231 வது பிரிகேட் தலைமையகம் மற்றும்233 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் உள்ள 6 வது கஜபா படையணி ஆகிய இடங்களுக்கான செவ்வாய்க்கிழமை (20) கள விஜயத்தை மேற்கொண்டார்.

முதலில் நாவலடியில் அமைந்துள்ள 6 வது கஜபா படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியினை 233 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த ஹேவகே மற்றும் 6 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்எம்ஜேபீ ரணராஜா ஆகியோர் வரவேற்றனர். அதேபோன்று 231 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம் செய்த அவர், 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டாரவைச் சந்தித்தார்.

இவ் விஜயத்தின் போது 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன் வருகை தந்தார். மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, அந்தந்த இடங்களில் உள்ள படையினருடன் உரையாடியதுடன், அவர்களது கடமைப் பாத்திரங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.