Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2022 18:00:25 Hours

மினுஸ்மா படைத் தளபதி இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு பாராட்டு

உயிராபத்தான சூழ்நிலையில் மாலியில் பணியில் ஈடுபட்டு வரும் ஜ.நா இலங்கை அமைதிகாக்கும் படையினரின் சிறந்த போர் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தினை பாராட்டும் முகமாக இடம்பெற்ற நிகழ்வின் போது, 12 வது இலங்கை பொறியியலாளர் படையணியின் மேஜர் ஆர்.ஏ.டி.எம்.டி செனவிரத்ன அவர்களுக்கு ஒரு சிறப்பு சேவை பதக்கம் வழங்கப்பட்டது.

அங்கு மாலியில் காவோவில் இருந்து கிடால் வரையிலான சமீபத்திய வழங்கள் வாகனத் தொடரணி சேவையில் ஈடுபட்ட அமைதிகாக்கும் படையணியின் இலங்கை தேடல் மற்றும் கண்டறிதல் குழுவினர், இரண்டு மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி சாதனங்களை கண்டுபிடித்ததுடன் அவை வெடித்து தேசத்தினை ஏற்படுத்துவதற்கு முன்பு இரண்டையும் திறம்பட செயலிழக்கச் செய்தனர்.

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பரிமாண ஒருங்கிணைந்த பணியின் கீழ் (மினுஸ்மா) மாலியை தளமாகக் கொண்ட அமைதிகாக்கும் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு முதல் மாலியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளது.

அமைதிகாக்கும் படை முகாமிற்கு வருகை தந்த மினுஸ்மா படைத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கொர்னேலிஸ் ஜொஹானஸ் மத்திஜ்சென் அவர்கள் இலங்கை இராணுவத்தின் 4 வது போர்த் தொடரணி படையினரின் தொழில்முறைத் திறனைப் பெரிதும் பாராட்டியதுடன், வீதியோரம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த இரண்டு மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி சாதனங்களை கண்டுபிடித்த 12 வது இலங்கை பொறியாளர் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஆர்.ஏ.டி.எம்.டி. செனவிரத்ன அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு பதக்கத்தையும் வழங்கினார்.

அங்கு தளபதி தேடுதல் மற்றும் கண்டறிதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரி மற்றும் படையினரின் தொழில்முறை நிர்வாகத்தின் விழிப்புணர்வு, கவனம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைப் பற்றி உயர்வாகப் பேசினார்.

கடந்த 2-3 மாதங்களில், மாலியில் உள்ள பழங்குடி பயங்கரவாத குழுக்கள் தங்கள் போட்டியாளர்களையும், நிலத்தால் சூழப்பட்ட நாட்டிற்கு சேவை செய்யும் ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படையினர்களையும் குறிவைத்து தங்கள் கடுமையான உள்நாட்டு வன்முறைச் செயல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதேபோல், அவர்களின் மிருகத்தனமான மற்றும் கடுமையான பயங்கரவாத தாக்குதல்கள் ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா அமைதிகாக்கும் படையினருக்கு பயங்கரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.