Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2022 17:29:10 Hours

படையணிகளுக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியின் விருது வழங்கல்

இராணுவ குத்துச்சண்டை குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கிடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2022 செவ்வாய்க்கிழமை (20) பனாகொட இராணுவ உடற் பயிற்சிப் பாடசாலையில் ஐந்து நாட்கள் (செப்.17-21) நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணி அணி உட்பட 15 படையணி அணிகள் பங்கேற்றன. 14 எடைப் பிரிவுகளின் கீழ் 17 படையணிகளை சேர்ந்த 78 ஆண் இராணுவ குத்துச்சண்டை வீரர்களும், 11 பெண் குத்துச்சண்டை வீரர்களும், இராணுவத்தில் வளரும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையிலும் இப்போட்டியில் போட்டியிட்டனர்.

சம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி போட்டியின் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துகொண்டார். இராணுவ குத்துச்சண்டைக் குழுவின் தலைவர், மேஜர் ஜெனரல் ஆர்எடிபி ரணவக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பிரதம அதிதியை வரவேற்றார்.பலமான போட்டியின் பிறகு, இலங்கை இராணுவ சேவைப் படையணி குத்துச்சண்டை வீரர்கள் சாம்பியன்ஷிப்பை தட்டிச்சென்றனர். விஜயபாகு காலாட் படையணி குத்துச்சண்டை வீரர்கள் இரண்டாம் இடத்தையும், இலங்கை சிங்க படையணி வீரர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, பெண்கள் பிரிவில் 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி வெற்றியீட்டியிடதுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி பெண்கள் குத்துச்சண்டை வீரர்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

ஆண் புதியவர்கள் பிரிவில், விஜயபாகு படையணி குத்துச்சண்டை வீரர்கள் முதலாவது இடத்தையும், இலங்கை இராணுவ போர்க் கருவிகள் படையணியின் குத்துச்சண்டை வீரர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இராணுவ சேவை படையணி குத்துச்சண்டை வீரர்கள் மூன்றாம் இடத்தைப் பெற்றனர். பெண் புதியவர்கள் பிரிவில், இலங்கை இராணுவ மகளிர் படையணி முதலாம் இடத்தையும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணி குத்துச்சண்டை வீரர்கள் 2 வது இடத்தையும் வென்றனர்.

வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவினால் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி ஜே கொடித்துவக்கு ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பி என்டியூ மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டி ஜீ எஸ் செனரத் யாப்பா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பி என்டியூ அவர்களும் சாதனையாளர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

விஜயபாகு காலட் படையணியின் லான்ஸ் கோப்ரல் பிரசன்ன பி எ ஆர் சிறந்த ஆண் குத்துச்சண்டை வீரராகவும், இலங்கை போர்க்கருவிகள் ப படையணியின் கோப்ரல் சஞ்சீவ நுவான் எம் பி பி சிறந்த ஆண் தோல்வியாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கிடையில் 5 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி சிப்பாய் ரத்னபுலி எஸ் டப்ளியூ சிறந்த பெண் குத்துச்சண்டை வீரராகவும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிப்பாய் மானதுங்க எம் டீ டீ சிறந்த பெண் தோல்வியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.