Header

Sri Lanka Army

Defender of the Nation

21st September 2022 22:45:11 Hours

யாழ் படையினரால் பருத்தித்துறையில் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

யாழ் குடாநாட்டில் வறிய மக்களுக்கான வீடு நிர்மாணப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், யாழ் பருத்தித்துறை துன்னாலை பிரதேசத்தில் வசிக்கும் திரு செல்வரத்தினம் ஜெயப்பிரதா அவர்களுக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிர்மாணிப்பு பணிகள் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரின் பொறியியல் , தொழிநுட்ப திறன் மற்றும் மனிதவளம் என்பவற்றுடன் வெளிநாட்டில் வசிக்கும் மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) மற்றும் அவரது குடும்ப நண்பர்கள், மோதரை மட்டக்குளி லயன்ஸ் கழகத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்து மத சம்பிரதாயத்திற்கு மத்தியில், அடிக்கல் நாட்டப்பட்டதுடன், நிகழ்வின் இறுதியில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் ஒரு சில வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டல் மற்றும் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசேல விக்ரமசிங்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந் நிகழ்வு படையினரால் மேற் கொள்ளப்பட்டது.

மோதேர - மட்டக்குளிய சிங்க கழக உறுப்பினர்கள், கரவெட்டி உதவி பிரதேச செயலாளர், 551, 552 மற்றும் 553 பிரிகேட்களின் தளபதிகள், அனைத்து படையலககளின் கட்டளை அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர், படையினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் வைபவத்தில் கலந்துகொண்டனர்.