Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2022 15:45:35 Hours

211 வது பிரிகேடினரால் குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வாழ்வாதார உதவி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் 211 வது பிரிகேட் படையினரால் வவுனியா மதவாச்சி, ரம்பேவ மற்றும் வவுனியா தெற்கு பிரதேசத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான 350 உலர் உணவுப் பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான 100 பொதிகள் ஆகியன வெள்ளிக்கிழமை (9) வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான அனுசரணையினை கடவத்தையை சேர்ந்த 'சரண' பௌத்த அறக்கட்டளையின் திரு சுனில் விஜேவர்தன மற்றும் திரு ஞானசிறி ஆகியோர் அவர்களது வர்த்தக பங்குதார்களுடன் இணைந்து வழங்கினர்.

21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோனின் தலைமையில் 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட இவ் மனிதாபிமான நடவடிக்கையானது 211 வது பிரிகேட் சிவில் விவகார பிரிவு மற்றும் 2 வது (தொ) விஜயபாகு காலாட்படையின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 3.4 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த சமூகத் நலத்திட்டத்தில் கடவத்தையின் ‘சரண’ பௌத்த அறக்கட்டளையின் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர். மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி எம்.சி.மளவியாராச்சி, பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன ஆகியோர் அந்த நிவாரணப் பொதிகளை தகுதியான குடும்பங்களுக்கும் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வழங்கினர்.

இந் நிகழ்வில் போது சிவில் விவகார அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.