Header

Sri Lanka Army

Defender of the Nation

14th September 2022 17:00:18 Hours

கெமுனு ஹேவா படையணி சிரேஷ்ட அதிகாரிக்கு படையணி தலைமையகத்தில் வரவேற்பு

குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகம், புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதரவிற்கு பாராட்டு விழா சனிக்கிழமை (3) குருவிட்ட கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.

முகாம் நுழைவாயிலில் புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அன்றைய நிகழ்வு தொடங்கியது. பின்னர், நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கெமுனு ஹேவா படையினரின் கௌரவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜானக விமலத்ன, அன்றைய பிரதம அதிதியை சகல தரத்தினருடனான தேநீர் விருந்துபசாரத்திற்க்கு அழைத்தார்.

கெமுனு ஹேவா படையணி பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.