Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2022 20:19:35 Hours

55 வது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் யாழ். இளைஞர்களுக்கான நட்பு ரீதியாக உதைபந்தாட்டப் போட்டி

தேசிய மட்டத்தில் விளையாட்டு வீரர்களை மேம்படுத்தல் மற்றும் இளைஞர்களை பல்வேறு விளையாட்டுகளுக்கு ஊக்குவிப்பதில் முன்னணியில் இருக்கும் இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டை தளமாகக் கொண்ட படையினர் சனிக்கிழமை (10) கட்டைக்காடு கால்பந்து மைதானத்தில் யாழ் இளைஞர் அணி மற்றும் கடைக்காடு இளைஞர் அணிகளுக்கிடையில் நட்பு ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியினை ஏற்பாடு செய்தனர்.

இப் போட்டியானது 55 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டுதலுக்கமைய வடக்கு யாழ் இளைஞர்களின் விளையாட்டுத்திறன், நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் பிற விளையாட்டுத் திறமைகளை வெளிபடுத்தும் நிமித்தம், இந்த நட்பு உதைபந்தாட்டப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத் திட்டமானது இராணுவம் மற்றும் சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்திகொள்வதனை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

55வது படைப் பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வைக் ஆரம்பித்துவைத்தார்.

மேலும் இப் போட்டியானது இப் பிரதேச விளையாட்டு வீரர்களின் கரகோஷங்கள் மற்றும் ஆரவாரங்களுக்கு மத்தியில் இடம் பெற்றது. யாழ் இளைஞர் அணியும், கட்டைக்காடு இளைஞர் அணியும் கலந்து கொண்ட இந்த போட்டிற்கு 51 வது படைப் பிரிவு மற்றும் 55 வது படைத் தலைமையகமும் அனுசரணை வழங்கியது. சுவாரசியமான ஆட்டத்திற்குப் பின்னர், கடைக்காடு இளைஞர் அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக போட்டியிட்டு, தங்களது திறமையையும், ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணமும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

51 வது மற்றும் 52 வது படைப் பிரிவுகளின் தளபதிகள், வடக்கு முன் பராமரிப்பு பகுதியின் தளபதி , யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி அதிகாரி , 552 மற்றும் 553 பிரிகேட் தளபதிகள், அரச அதிகாரிகள், அந்தந்த படையணிகளின் கட்டளை அதிகாரிகள், யாழ் குடாநாட்டில் உள்ள படையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந் நிகழ்வை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.