Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2022 14:46:42 Hours

இராணுவத்தினரால் கரட் பயிர் செய்கை திட்டம்

சில வாரங்களுக்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் பசுமை விவசாய வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதினை தொடர்ந்து , நாட்டின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை மேம்படுத்தும் முகமாக கைவிடப்பட்ட 1500 ஏக்கருக்கும் அதிகமான அரச காணிகளில் பயிரிச் செய்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இராணுவ விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு படையணி, நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே அனைத்து வகையான பயிர்களின் பயிர்ச்செய்கையையும் ஆரம்பித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்திற்கு இணங்க, இராணுவத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்களின் வழிகாட்டுதல்களின் கீழ், 1 வது இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி 2022 செப்டம்பர் 02 அன்று டயகமவில் முதல் கட்டமாக 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் கரட் பயிர் செய்கையினை ஆரம்பித்துள்ளது.

கரட் ஒரு குளிர்காலப் பயிராகும் 15 ° C முதல் 20 ° C வரையிலான வெப்பநிலையில் பயிரிடப்பட்டால் மிக நல்ல நிறத்துடன் வளரும். கரட் பயிருக்கு ஆழமான தளர்வான களிமண் தேவை மற்றும் அதிக உற்பத்திக்கு pH அளவு 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியினால் பயிர்செய்கை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட மொத்த பரப்பளவு 25 ஏக்கராகும் இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்.

திட்ட ஆரம்ப நிகழ்வில் விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் அரேஷ ராஜபக்ஷ, 1 வது இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்விகேடபல்யு அபேவிக்ரம, மேஜர் ஏஎம் அமரதுங்க மற்றும் அப்படையணியின் சிப்பாய்கள் என பலரும் கலந்து கொண்டனர்.