Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2022 12:10:56 Hours

14 வது படைப்பிரிவு மற்றும் 144 வது பிரிகேட் படையினர் பொமிரியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களுக்கு நிவாரணமளிப்பு

கடுவெல, பொமிரிய கிராமத்தின் களனி ஆற்றின் கரையோரத்தில் செப்டம்பர் 5-6 திகதிகளில் படையினர் விரைவாக செயற்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கியதால் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதுடன், பெருமழையினால் ஆற்று நீர் கசிவு ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை உரிய நேரத்தில் வெளியேற்றியதன் மூலம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 2 வது (தொ) இலேசாயுத காலாட்படையணியின் படையினர், போமிரியா பிரதேசத்தின் 471 கிராம சேவை பிரிவு கடற் கரைகள் நிரம்பி வழிவதைத் தடுக்கும் பொருட்டு உடனடியாகச் செயற்பட்டு ஆற்றங்கரையின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை கடும் மழையின் மத்தியில் அடுக்கிவைத்தனர்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் ரொஷான் ஜயம்மன்ன மற்றும் 144 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2 வது (தொ) இலேசாயுத காலாட்படையணி படையினர் அந்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டனர்.