Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2022 15:30:56 Hours

மேற்கு படையினரால் ‘டெங்கு பரவல்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 61 வது மற்றும் 14 வது படைப்பிரிவுகளின் படையினர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் கொழும்பு, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் செப்டம்பர் 1 முதல் 3 வரை பல டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தினர்.

மருத்துவ அதிகாரிகளின் கூற்றுப்படி, தொற்றுநோய் வேகமாகப் பரவி வருவதால், முன்னுரிமை அடிப்படையில் அதிகாரிகள் உட்பட 165 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை இந்த திட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அறிவுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் டெங்கு பரவலின் ஆபத்துகள் மற்றும் நீர்நிலைகள், குப்பைக் குவியல்கள், சாக்கடைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்தி அதைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் குறித்த திட்டங்களில் இணைந்திருந்தனர்.