Header

Sri Lanka Army

Defender of the Nation

05th September 2022 14:15:32 Hours

இலங்கை முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் 78 வது ஆண்டு விழாவைக் முன்னிட்டு முன்னாள் இராணுவ வீரர்கள் ஒன்றிணைவு

இலங்கை முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் 78 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (4) ஆம் திகதி அத்திடிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஒன்றிணைவு விழா ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்து கொண்டதுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் பல முன்னாள் முப்படையினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சம்பிரதாய மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து இலங்கை முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) அவர்களினால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அதே நேரத்தில், இலங்கை முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் வெளிப்புற திட்டங்கள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளினை உள்ளடக்கிய சுருக்கமான முன்னேற்ற அறிக்கையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அன்றைய பிரதம விருந்தினர் கௌரவ சேவைப் பதக்கத்தை (கவுரவன்வித சேவா பதக்கம) பல முன்னாள் போர் வீரர்களுக்கு வழங்கி கௌரவித்தார். அதே நேரத்தில், முன்னாள் போர் வீரர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் (யவஜீவ சாமாஜிக) அங்கத்துவமும் வழங்கப்பட்டது.

அன்றைய பிரதம அதிதி இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் , அரசுக்கு எவ்வித செலவும் இன்றி விரைவில் ஸ்தாபிக்கப்பட்ட பாதுகாப்புத் தலைமையக வளாகத்தினுள் நிரந்தர அலுவலக இடத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், உயிர்நீத்த அனைத்து போர்வீரர்கள் மற்றும் படைவீரர்களின் நினைவாக அவர் அஞ்சலி செலுத்தியதுடன், நாட்டின் பாதுகாப்பிற்காகவும் நீடித்த அமைதிக்காகவும் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க தியாகங்களை நினைவு கூர்ந்தார். ஜெனரல் கமல் குணரத்னவும் (ஓய்வு) தனது புத்தகங்களின் சில பிரதிகளை முன்னாள் போர் வீரர்களுக்கு பரிசாக வழங்கினார்.

முன்னாள் போர் வீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) அவர்களினால் வழங்கப்பட்ட நன்றியுரையுடன் தொடக்க விழா நிறைவு பெற்றது. முன்னாள் முப்படைத் தளபதிகள் உட்பட ஓய்வுபெற்ற முப்படையினர் பெருமளவானோர் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டனர்.

1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னாள் போர் வீரர்கள் சங்கமானது 48 நாடு தழுவிய ஆயுதப்படைகளின் சங்கங்கள் மூலம் இணைந்து தற்போது சுமார் 45,000 முப்படை வீரர்களைக் கொண்டுள்ளது.