Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd September 2022 18:19:08 Hours

65 வது படைப்பிரிவினர் வருமானம் ஈட்டுவதற்கான முன்முயற்சியாக மீன் குஞ்சுகள் வளர்ப்பு

ஆலங்குளத்திலுள்ள 65 வது பிரிவு தலைமையகம் கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய நீரியல் மற்றும் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வட மாகாண சபையின் உள்நாட்டு மீன்பிடி பிரிவினருடன் இணைந்து மீனவ சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கும் ஓகஸ்ட் 29-30 திகதிகளில் 285,000 நன்னீர் மீன்குஞ்சுகளை வவுனிக்குளம், தென்னியங்குளம் மற்றும் தேரங்கண்டல் குளங்களுக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுத்தது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, போதுமான வருமான ஆதாரங்கள் இல்லாமல் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கூறிய பகுதிகளில் உள்ள மீனவர்களின் பெரும் குழுக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து அந்த மீன்குஞ்சுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

10 வது இலங்கை இலோசாயுத காலாட்படையினர் , 17 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் மற்றும் 65 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் உள்ள சிவில் விவகார அலுவலக அதிகாரி இணைந்து அரச அதிகாரிகள் மற்டறும் கட்டளை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி அந்த விரல் குஞ்சுகளை அந்தந்த குளத்தில் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

65 வது படைப்பிரிவின் தளபதி பிரதம விருந்தினராக பல அதிகாரிகளுடன் இத்திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி.ஏ.லதுமீரா, வடமாகாணசபையின் உள்நாட்டு மீன்பிடி பிரிவின் பணிப்பாளர் அபிராமி பரமுரளி, வடமாகாண இலங்கை தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குமார் சங்கீதம், மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர் மரியதாஸ் மரியுரு, பிரகாஷ், பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர், மல்லாவி மற்றும் பல அரச அதிகாரிகள் இந்த ஆரம்ப திட்டத்தில் கலந்து கொண்டனர்.