Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2022 20:08:14 Hours

பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை கவச வாகன படையணியின் பிரிகேடியர் ரவி பத்திரவிதான அவர்கள் வெள்ளிக்கிழமை (26) பணியாளர் கடமைகள் பணிப்பகத்தின் 37 வது பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர், தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

புதிய அலுவலகம் பொறுப்பேற்கும் நிகழ்வில் பணிப்பகத்தின் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

தற்போது 56 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் மஞ்சுல காரியவசம் அவர்களிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.