Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2022 18:30:55 Hours

இராணுவத் தளபதிக்கு வன்னி படையினர் மரியாதை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் யாழ். குடாநாட்டிலிருந்து தனது முதல் முறையான விஜயத்தை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் (27) பிற்பகல் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு தனது முதல் முறையான விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த இராணுவத் தளபதிக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில் வைத்து கஜபா படையணியின் படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டு அன்றைய பிரதம அதிதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். இதனை தொடர்ந்து தளபதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, சம்பிரதாய விஜயத்தின் போது அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையளகுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு தளபதி உரையாற்றினார், இதன் போது கடமைகளின் முக்கியத்துவத்தையும் தொழில்முறை அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் அவசியத்தையும் தளபதி சுட்டிக் காட்டினார். மேலும் இராணுவத்தினால் தற்பொழுது முன்னெடுக்கப்படும் விவசாய திட்டம் தொடர்பான தொழில்முறை அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக் காட்டிதுடன் நிறுவனத்தின் ஒழுக்கத்தின் உயர்ந்த தரத்தை பேணுவதன் அவசியம் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.

உரையின் முடிவில், இராணுவத் தளபதி மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோர் அன்றைய விஜயத்தின் நினைவுகளாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

21, 54, 56, 62 மற்றும் 65 வது படைப்பிரிவுகளின் தளபதிகள். வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதி தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.