Header

Sri Lanka Army

Defender of the Nation

24th August 2022 07:22:28 Hours

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில், அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு 'ஊடக' விழிப்புணர்வு விரிவுரை

யாழ். பாதுகாப்புப் படை தலைமையகம் படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் சேவையாற்றும் இளம் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு யாழ். பாதுகாப்புப் படை தலைமையக கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 12-13 ஆகிய இரண்டு நாட்கள் கொண்ட செயலமர்வில் ஊடகங்களும் இராணுவம் மற்றும் நாட்டிற்கு அதன் தாக்கம் பற்றி விரிவுரை நடாத்தப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவ ஊடக ஆலோசகர் திரு சிசிர விஜேசிங்க அவர்களினால், இரண்டு நாட்களில் "இராணுவத்தில் ஊடகங்களின் பல்வகைத் தாக்கம்-அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள்/சவால்கள்" என்ற தலைப்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.

விரிவுரைகள் விரைவான தொழிநுட்ப மயமாக்கல், முக்கியமான முடிவெடுப்பவர்களாக பல்வேறு தொடர்பாடல் ஊடக வளர்ச்சிகள், சமூக ஊடகங்கள், விம்பத்தை உருவாக்கும் நடைமுறைகள், தவறான தகவல் மற்றும் பொய் தகவல், தொடர்ச்சியான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், நவீன போக்குகள் நாடு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்கம், சர்வதேச விளைவுகள், ஊடகத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறைகள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பொதுவான நடத்தை, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் தாக்கம், கவனத்துடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவம், செய்தி/செய்தி சேகரிப்பின் தன்மை, நெறிமுறைகள் மற்றும் ஊடகங்களின் ஒழுக்க நடத்தை போன்றவை இதன் போது முன்வைக்கப்பட்டன.

படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட்களில் பணியாற்றும் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேரடியாகவும், 40 அதிகாரிகள் ஜூம் தொழில்நுட்பம் மூலமாகவும் மற்றும் சிப்பாய்களும் விரிவுரையில் கலந்து கொண்டனர்.