Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2022 16:04:09 Hours

முல்லைத்தீவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான கிரிக்கெட், கரப்பந்து மற்றும் காற்பந்து போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள பயிற்சிப் பாடசாலைகள் உட்பட அனைத்து அமைப்புக்களில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சேவை உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட், கரப்பந்து மற்றும் காற்பந்தாட்ட போட்டிகள் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் கருத்தியல் வழிகாட்டலுக்கு அமைய 2022 ஆகஸ்ட் 1- 13 வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு 6 வது இலங்கை சிங்க படையணியின் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன.

57 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், அவர்கள் விளையாட்டுத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும், படையணி மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அணிகளுக்கு இடையே சிறந்த உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் போட்டியை ஒழுங்கமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2022 ஆகஸ்ட் 01, முதல் ஆகஸ்ட் 03, 2022 வரை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 9 வது விஜயபாகு காலாட் படையணி கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. மேலும் 6 வது இலங்கை சிங்க படையணியின் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றியது.

2022 ஆகஸ்ட் 04 முதல் ஆகஸ்ட் 07 வரை நடத்தப்பட்ட கரப்பந்து போட்டியில் 9 வது விஜயபாகு காலாட் படையணி வீரர்களுக்கு சாம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது. மேலும் 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வீரர்கள் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினர். இதற்கிடையில், காற்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் 6 வது இலங்கை சிங்கப் படையணி சாம்பியன்ஷிப் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

57 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் இறுதிப் போட்டிகளை நேரில் பார்வையிட்டதுடன் பரிசளிப்பு விழாவிலும் கலந்துக் கொண்டார் கைதட்டல்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

57 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் சரித் திசாநாயக்க, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத், 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன , 57 வது படைப்பிரிவின் கேணல் பொதுப் பணிநிலை அதிகாரி கேணல் இலந்த ரணதூங்க மற்றும் 57 வது படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் வழங்கல் கேணல் நிரஞ்சன் டி சில்வா ஆகியோர் அன்றைய இறுதிப் போட்டிகளைக் கண்டுகளித்தனர்.