Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2022 18:13:56 Hours

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி ரணவிரு அப்ரல்ஸ்க்கு விஜயம்

இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் ரணவிரு அப்ரல்ஸ்' முகாமைத்துவ சபையின் தலைவரான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய புதன்கிழமை யக்கல ரணவிரு அப்ரல்ஸ்' தொழிற்சாலைக்கு அதன் செயல்பாட்டு அம்சங்களை நேரடியாக காண்பதற்காக புதன்கிழமை (10) தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

யுத்த உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹிரோஷ் வணிகசேகர மற்றும் இராணுவ யுத்த உபகரண சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் விதானச்சி ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.வருகை தந்த இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியை ரணவிரு அப்ரல்ஸ் தளபதி பிரிகேடியர் ஆசாத் இஸடீன் , பிரதி தளபதி பிரிகேடியர் அமில வாசகே மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வரவேற்ற பிறகு, தொழிற்சாலை வளாக களப்பயணத்துடன் அன்றைய பயணத் திட்டம் தொடங்கியது.

அதன்பிறகு, அவர் அந்த இடத்திற்குச் சென்றதன் நினைவாக மாங்கன்றுகளை நடுவதற்கு அழைக்கப்படுவதற்கு முன்பு தொழிற்சாலை செயல்முறை மற்றும் தொழிற்சாலை அமைப்பு பற்றிய விளக்கத்தைப் பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, விரும்பிய உற்பத்தி இலக்குகளை அடைவதற்கும், இலங்கை இராணுவத்திற்கான உயர்தர சீருடைகளை தயாரிப்பதில் விசேட கவனம் செலுத்துவதற்கும் தொழிற்சாலையின் தரத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அளிப்பதாக உறுதியளித்தார்.

திட்டத்தின் வெற்றிக்காக ரணவிரு அப்ரல்ஸில் சேவையாற்றும் மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் உட்பட தளபதி மற்றும் படையினர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அன்றைய நிகழ்வுகளின் முடிவில் இராணுவ பதவி நிலை பிரதானியின் ரணவிரு அப்ரல்ஸ் விஜயத்தின் நினைவாக விருந்தின பதிவேட்டு புத்தகத்தில் உண்ணங்களை பதிவிட்டார்.