Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2022 15:26:48 Hours

கொமாண்டோ படையணி தலைமையக பயிற்சிப் பாடசாலையில் பாடநெறியை தொடர்ந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

குடாஓயா கொமாண்டோ படையணி தலைமையக பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற பாடநெறி இல: 49 49 A, 49 B மற்றும் 49 C பிரிவினை தொடர்ந்த 07 அதிகாரிகள் மற்றும் 256 கொமாண்டோ படையினருக்கு சனிக்கிழமை (30) சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில் பிரதம அதிதியாக கொமாண்டோ படையணியின் தளபதியும் முதலாவது படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அதர்கள் கொமாண்டோ பிரிகேட் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கலந்து கொண்டார்.

சிறந்த ஒட்டுமொத்த மாணவருக்கான விருதை கெப்டன் எம்.எஸ்.பி ரொட்ரிகோ, சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக சாதாரன சிப்பாய் தி.எச்.கே.யு சம்பத், சிறந்த உடல் தகுதிக்கான வீரராக சாதாரன சிப்பாய் கே.பி.டி.ஆர் நிர்மல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த பெற்றோர் மற்றும் உறவினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணிவகுப்பு காட்சிகள், இசைக்குழு நிகழ்ச்சிகள், ராப்லிங் நிகழ்ச்சிகள், கொமாண்டோக்களின் உண்மையான சண்டைக் காட்சிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

கொமாண்டோ படையணியின் தளபதி தனது சுருக்கமான உரையில், புதிதாகப் பட்டம் பெற்ற கொமாண்டோக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் ஒரு கொமாண்டோவாக இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அர்ப்பணிப்பு மற்றும் அதிக ஒழுக்கம் போன்றவற்றை உயர் நிலையில் கடைபிடிப்பதன் அவசியத்தையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, கொமாண்டோ படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் கே.கே.தர்மவர்தன, பிரிகேடியர் கே.எம்.எச்.எஸ். விக்கிரமரத்ன, கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலை மேற்பார்வை தளபதி லெப்டினன்ட் கேணல் டி.எம்.எஸ்.பி திசாநாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.